Published : 31 Aug 2019 08:35 AM
Last Updated : 31 Aug 2019 08:35 AM

‘தீதி கே போலோ’ திட்டத்தால் மம்தா மகிழ்ச்சி- மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைக்குமா திரிணமூல்?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

மேற்கு வங்கத்தில் துவக்கப்பட்ட ‘தீதி கே போலோ (அக்காவிடம் கேளுங்கள்)’ திட்டத்திற்கு கிடைத்த 10 லட்சம் மக்கள் வரவேற்பால் முதல்வர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனால், அம் மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்க வைக் குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள 42 மக்களவை தொகுதி களில் பாஜகவிற்கு கடந்த முறை வெறும் இரண்டு கிடைத்திருந்தன.

ஆனால், இந்தமுறை தேர்தலில் அது அதிகமாக உயர்ந்து 18 தொகுதி களை பாஜக பெற்றுள்ளது. இந்த 18 அங்குள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் 121 ஐ உள்ளடக்கி யது. இதனால், அங்கு 2021-ல் வர விருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் மம்தாவின் திரிண மூல் காங்கிரஸுக்கு பெரும் சவா லாகி வருகிறது பாஜக. பாஜகவை சமாளிக்க மம்தா, பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 1 முதல், ‘தீதி கே போலோ’ எனும் பெயரில் இணையதளம் மூலமாக அணுகி மக்கள் குறை கேட்கும் திட்டத்தை துவக்கினார். இதில் தன் மாநிலத்தின் பல்வேறு கிராமங் களுக்கு மம்தா திடீர் விஜயம் செய்து மக்களிடம் குறை கேட்பதும் சேர்க்கப்பட்டிருந்தது. நேற்று வரை குறைகளை தெரிவித்தவர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக மம்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தீதி கே போலோ இணையதளத்துக்கு மக்களிடையே மிகப்பெரிய வர வேற்பு இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த 30 முப்பது நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எங்களை இதில் அணு கியுள்ளனர். எங்கள் முயற்சிக்கு பாராட்டு, பரிந்துரைகள் மற்றும் தங்கள் குறைகளை தெரிவித்துள்ள னர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் தனது திட்டத்திற்கு வந்த தகவல்களின் எண்ணிக்கை குறித்தும் மம்தா அந்த ட்விட்டில் பதிவிட்டுள்ளார். அதன்படி, பத்து லட்சம் பேர் இணையதளத்தில் தொடர்பு கொண்டதாகவும் அதில், 42 சதவிகிதத்தினர் குறைகள் சொன்னதாகவும் மம்தா குறிப்பிட் டுள்ளார். இதில், 32 சதவிகிதம் பேர் யோசனை தெரிவித்தும், 22 சதவிகிதத்தினர் மம்தா அரசை பாராட்டியும் உள்ளனர். 4 சதவிகிதம் பேர் இதர பல காரணங்களுக்காக பேசியதாக கணக்கில் கொள்ளப் பட்டுள்ளது. இத்துடன் மம்தா கட்சியின் நிர்வாகிகள் சுமார் ஆயிரம் பேர் பத்து லட்சம் கிராமங் களில் 100 நாட்கள் தங்கி குறை களை கேட்டறியத் துவக்கி உள்ள னர். இதில், சாரதா சிட்பண்ட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார் களுக்கானப் பதில் அளிக்க திரிண மூல் கட்சியினர் திணறும் செய்திகள் வெளியானபடி உள்ளது.

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட இழப்பிற்கு பின் மம்தா, தேர்தல் நிபுணரான பிரஷாந்த் கிஷோர் உதவியை நாடியிருந்தார். அவரது இந்தியன் பொலிடிகல் ஆக் ஷன் கமிட்டி நிறுவனத்தின் யோசனைப் படி ‘தீதி கே போலோ’ உள்ளிட்டப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் உதவியால் தனது ஆட்சியை தக்க வைக்க முடியும் என மம்தா கட்சியினர் நம்பு கின்றனர். அதேசமயம், மம்தாவின் திட்டங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளது. தீதி கே போலோவை போல், ‘ச்சா சக்ரே திலீப் தா (திலீப் அண்ணனுடன் தேநீர்)’ எனும் பெயரில் ஒரு திட்டத்தை நேற்று முதல் துவக்கி உள்ளனர். இதில் அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோஷ் தலைமையில் பாஜகவினர் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x