Published : 21 Aug 2019 10:23 AM
Last Updated : 21 Aug 2019 10:23 AM

ரூ.30 கோடி நாணயத்தை மாற்ற திருப்பதி நிர்வாகம் புதிய திட்டம்

என். மகேஷ்குமார்

திருப்பதி

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய சலுகையை அறிவித்ததால் நாணயங்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் முன்வந்துள்ளன.

உலகின் பணக்கார கடவுளாக போற்றி வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் உண் டியல் மூலம் ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,300 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இந்த உண்டியல் காணிக்கை பணத்தை தேவஸ் தான நிர்வாகம், அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் தினமும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறது.

ஏழுமலையானின் உண்டி யலில் பணம் மட்டுமின்றி, தங்க நகைகள், வீடு- நிலத்தின் பத்திரங் கள், பங்கு பத்திரங்ளையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதில் நாணயங்கள் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 லட்சம் வரை காணிக்கையாக வரு கிறது. ஜல்லடைகள் மூலம் பிரித்து ரூ. 10, 5, 2, 1 என மூட்டை களாக கட்டப்பட்டு, திருப்பதி யில் தேவஸ்தான அலுவலகத் தில் உள்ள பெட்டகங்களில் பாது காப்பாக வைக்கப்படுகின்றன.

இந்த நாணயங்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 2 முறை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாணயங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவில்லை. இந்த நாணயங்களை சரிபார்த்து வாங்க அதிக நேரம் செலவாகும் என்பதால் எந்த வங்கியும் நாணயங் களை பெற்றுக் கொள்ள முன் வரவில்லை.

இதே நிலை நீடித்தால் நாணய பிரச்சினை வரும் என் பதை உணர்ந்த திருமலை திருப் பதி தேவஸ்தானம், இதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தது. ரூ. 1 கோடி வரை நாணயங்களை டெபா சிட் செய்து கொள்ளும் வங்கியில் மேலும் ஒரு கோடி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தது. ஒரே சமயத்தில் ரூ. 2 கோடி வரை டெபாசிட் வரு கிறது என்பதால் நாணயங்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் ஆர் வம் காட்டி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x