Published : 16 Aug 2019 12:23 PM
Last Updated : 16 Aug 2019 12:23 PM

சுதந்திர தின அறிவிப்புகள்: ட்விட்டரில் பிரதமருக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் மூன்று அம்சங்களை வரவேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக நேற்றைய உரையில் பிரதமர் மோடி, மக்கள்தொகை, பிளாஸ்டிக் பயன்பாடு, செல்வந்தர்கள் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் இதனை சுட்டிக் காட்டியுள்ள ப.சிதமரம் இன்று (வெள்ளிகிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி முன்வைத்த அறிவிப்புகளில் மூன்று அறிவிப்புகளை நாம் அனைவருமே வரவேற்க வேண்டும்.

பிரதமர் சொன்னதுபோல், சிறு குடும்பம் என்பது தேசபக்திக் கடமை, செல்வந்தர்களை மதிக்க வேண்டும், ஒரே முறை பயன்படும் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

முதலாவது மற்றும் மூன்றாவது அறிவிப்புகள் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை. இவற்றை மக்களுடன் இணைந்து முன்னெடுத்து செய்ய அர்ப்பணிப்புடன் இயங்கும் நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

இரண்டாவது அறிவிப்பை நிதியமைச்சரும் அவர் தலைமையின் கீழ் வேலை செய்யும் வருமான வரித்துறை அதிகாரிகளும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

— P. Chidambaram (@PChidambaram_IN) August 16, 2019

பிரதமர் பேசியது என்ன?

பிரதமர் தனது சுதந்திர தின உரையில், "மக்கள்தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோத்து செயல்படவேண்டும்.

ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். செல்வங்களை உருவாக்குவது தேசிய சேவை. அதைச் செய்வோரை சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x