Published : 13 Aug 2019 10:40 AM
Last Updated : 13 Aug 2019 10:40 AM

நாங்கள்தான் ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள்: பாஜக எம்.பி.,யைத் தொடர்ந்து மேவார் அரச குடும்ப உறுப்பினர் சர்ச்சை

அயோத்தியிலுள்ள உள்ள நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வியை அடுத்து ராமரின் வம்சாவளிக்கு உரிமை கோருவதில் போட்டா போட்டி நிலவுகிறது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பாஜக பெண் எம்.பி தியாகுமாரி, தாம் ராமரின் வம்சாவளி என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹேந்திர சிங்கும் உரிமை கோரியுள்ளார்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம், யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராமரின் வம்சாவளிகள் இன்னமும் அயோத்தியில் வசிக்கின்றனரா என்று நீதிபதிகள் கேட்டனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெய்ப்பூரில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பாஜக பெண் எம்.பி.யுமான தியாகுமாரி, தான் ராமரின் வாரிசு என்று கூறினார்.

மேலும், தான் ராமரின் வம்சாவளி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அதனை சமர்பிக்கவும் தயார் எனவும் தெரிவித்தார்.

இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது மேவார் - உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹேந்திர சிங் என்பவர் தாம்தான் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், "ஊடகங்கள் வாயிலாகவெ எனக்கு நீதிமன்றம் ராமரின் வாரிசுகள் குறித்து கேள்வி எழுப்பியது தெரியவந்தது. அப்படியென்றால் நீதிமன்றம் எங்களை நாடலாம். நாங்கள்தான் ராமரின் உண்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x