Published : 12 Aug 2019 09:21 AM
Last Updated : 12 Aug 2019 09:21 AM

மும்பை நட்சத்திர ஓட்டலில் 2 முட்டைக்கு ரூ.1,700 ‘பில்’ ட்விட்டர் பயனாளி அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி

மும்பை நட்சத்திர ஓட்டலில் 2 வேக வைத்த முட்டைகளுக்கு ரூ.1,700 கட்டணம் வசூலித்த அதிர்ச்சி தகவலை, ட்விட்டர் பயனாளி ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் தமிழில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர். சமீபத்தில் சண்டிகரில் நடந்த படப்படிப்பில் ராகுல்போஸ் பங் கேற்றார். அங்குள்ள ஜே.டபிள்யூ.மேரியாட் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர் 2 வாழைப் பழம் கேட்டுள்ளார்.

அழகான தட்டில் அவற்றை வைத்து கொடுத்துள்ளனர். ஆனால், ஜிஎஸ்டி.யுடன் சேர்த்து ரூ.442 கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் போஸ், அந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டார். இது பெரும் வைரலானது. ஒட்டல் நிர்வாகத்தை கண்டித்து வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் நட்சத்திர ஓட்டல் என்றாலே ஆடம்பரம் என்பது தெரிந்ததுதானே என்று சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இந்தப்பிரச்சினையில் ஜிஎஸ்டியை தவறாக வசூலித்ததாக கூறி ஓட்ட லுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் பயனாளி கார்த்திக் தர் என்பவர், மும்பையில் உள்ள ‘போர் சீசன்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலுக்கு சென் றுள்ளார். அங்கு 2 வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டுள்ளார். அவற்றுக்கு ரூ.1,700 கட்டணம் வசூலித்துள்ளனர். ஆம்லெட் விலையும் அதேதான். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் தர், ஓட்டலில் வழங்கிய ‘பில்’லை ட்விட்டரில் வெளியிட்டார். அதற்கு, ‘2 முட்டைகள் விலை ரூ.1,700’ என்று தலைப்பும் கொடுத்துள்ளார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ட்விட்டரில் ராகுல் போஸை இணைத்து, ‘இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க லாமா?’ என்று கேட்டுள்ளார்.

இதற்கு மற்றொரு ட்விட்டர் பயனாளி, ‘‘மிகப் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கோழியாக இருக்க வேண்டும்’’ என்று கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டல் தரப்பில் இருந்து இது வரை எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x