Published : 06 Aug 2019 07:02 PM
Last Updated : 06 Aug 2019 07:02 PM

காஷ்மீர் விவகாரம்:  ‘கவலைப்படும்’ சீனா;  இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுறுத்தல்

லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்த சீனா, காஷ்மீர் விவகாரம் குறித்து உண்மையிலேயே தாங்கள் கவலைப்படுவதாகவும், இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இருதரப்பினரும் அங்கு பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களில், நடைமுறைகளை தவிர்க்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீ விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு ‘தெளிவானது, சீரானது’ என்று தெரிவித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யங் காஷ்மீர் விவகாரம் இந்திய-பாகிஸ்தான் வரலாற்று தொடர்ச்சி கொண்டது. மேலும் இது சர்வதேச நாடுகளின் கருத்தொற்றுமையும் இதில் அடங்கும் என்றார்.

இது தவிர தனியான அறிக்கை ஒன்றில் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்த சீனா, “இந்தியா-சீனா எல்லையில் மேற்குப் பிரிவில் இருக்கும் பகுதியை இந்தியா சேர்த்துக் கொள்வதை சீனா எப்போதும் எதிர்த்தே வந்துள்ளது. இந்த நிலைப்பாடு சீராகவும் தெளிவாகவும் உள்ளது, இதில் மாற்றமில்லை.

தற்போது இந்தியா சட்டங்களைத் திருத்தி மாற்றியிருப்பது சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது. இதை ஏற்க முடியாது என்பதோடு இந்தச் சட்டங்களினால் எந்த வித தாக்கமும் ஏற்படுத்த முடியாது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும் காஷ்மீரின் தற்போதைய நிலை கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறிய சீனா “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பினரும் எச்சரிக்கையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக அதன் நிலையை மாற்றும் செயல்பாடுகளை தவிர்த்து அங்கு பதற்றங்கள் ஏற்படாமல் இருக்கச் செய்வது அவசியம்

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சம்பந்தப்பட்ட தகராறுகளை தீர்த்துக் கொள்ளவே முயற்சி செய்ய வேண்டும். பிராந்திய நிலைத்தன்மையையும் அமைதியையும் இருதரப்பினரும் உறுதி செய்ய வேண்டும், என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

-பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x