Published : 05 Aug 2019 09:44 AM
Last Updated : 05 Aug 2019 09:44 AM

பழங்குடியினத்தவர் 10 பேர் சுட்டுக்கொலை: கலெக்டர், எஸ்.பி. நீக்கம் முதல்வர் ஆதித்யநாத் தகவல்

லக்னோ

பழங்குடியினத்தவர் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்படுவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த மாதம் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது கிராமத் தலைவரும் அவரது ஆதரவாளர்களும் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கூடுதல் தலைமை செயலர் (வருவாய்) தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்தக் குழு நேற்று முன்தினம் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப் பித்தது.

இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பழங்குடியினத் தவர் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சோன்பத்ரா மாவட்ட ஆட்சியர் அனிகித் குமார் அகர்வால் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சல்மான்தாஜ் பாட்டில் ஆகிய இருவரும் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியிலான விசா ரணை நடைபெறும்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x