Published : 20 Jul 2019 04:43 PM
Last Updated : 20 Jul 2019 04:43 PM

இரவு வரை நடைபெற்ற மக்களவை: எம்.பி.க்களை கவனித்து, அலுவலர்களை கைவிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா

ஆர்.ஷபிமுன்னா

 17 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் முதல் கூட்டத்தொடர் பலநாள் இரவு வரை நடைபெற்றது. இதில், தன் எம்.பிக்களுக்கு உணவளித்து கவனித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அதன் அலுவலர்களுக்கு எதையும் செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

கடந்த வாரம், ரயில் மானியக்கோரிக்கை அன்று முதமுறையாக இரவு 11.00 மணி வரை மக்களவை நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியின் எம்.பிக்களுக்கும் மட்டும் சபாநாயகர் உத்தரவின் பேரில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 

மக்களவை நடைபெறும் நேரத்தில் எம்.பிக்களுக்கு உதவியாக நாடாளுமன்ற பணியாளர்கள், பாதுகாவலர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும் இருக்க வேண்டி வருகிறது. எனினும், எம்.பிக்களுக்கு கிடைத்த இரவு உணவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால், நாடாளுமன்ற அலுவலர்கள் பலரும் சபாநாயாகர் ஓம் பிர்லாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்கள் பிரச்சனை ரயில் மானியக்கோரிக்கை வந்த மறுதினம் மக்களவையிலும் எதிர்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இது குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் அவைத்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, ’எம்.பிக்களுக்கு உணவளித்தது போல் அலுவலர் உட்பட அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும். அவர்களை மட்டும் பட்டினியாக பணியாற்றக் கூறுவது நியாமல்ல.’ எனத் தெரிவித்தார்.

இவரது கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் ஓம் பிர்லா, இனி இரவு வரை செயல்படும் நாட்களில் அனைவருக்கும் உணவளிப்பதாக உறுதி கூறினார். அடுத்த சில தினங்களிலும் இரவு வரை நடைபெற்றது.

ஆனால், அதில் சபாநாயகர் அளித்த உறுதி காக்கப்படவில்லை. மக்களவை இரவு நடைபெறும் என முன்கூட்டியே அறியாமல் பல அலுவர்களும், அதிகாரிகளும் உணவும் கொண்டுவரவில்லை. 

மேலும், நாடாளுமன்ற கேண்டீன்களிலும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான உணவு வசதி இரவுகளில் இருப்பதில்லை. தம் பணியை விட்டு வெளியில் சென்று உணவருந்தி வரும் நிலையும் இல்லை. 

இதனால், நாடாளுமன்றத்தின் அலுவலர்கள் அவதிப்பட்டிருந்தனர். இதேபோல், வேலைநேரத்திற்கும் அதிகமான பணிகளுக்காக அவர்களுக்கு தனியாக கூஉட்தல் ஊதியமும் அளிக்கப்படுவதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x