Published : 15 Jul 2019 09:04 PM
Last Updated : 15 Jul 2019 09:04 PM

முன்னாள் பிரதமர் மகன் எம்.பி. பதவியில் இருந்து விலகல்: பாஜகவில் இணைய திட்டம்?

 

லக்னோ

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான நீரஜ் சேகர் மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் பாலியா மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் 2007 இடைத் தேர்தல் மற்றும் 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார்.

அதன் பிறகு தோல்வியடைந்ததால் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் அவருக்கு மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

அவர் விரைவில்  பாஜகவில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் காலியிடத்தில் பாஜக சார்பில் அவர் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இதன் மூலம் மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் பலம் ஒன்று குறையும். அதேசமயம் பாஜவின் பலம் ஒன்று அதிகரிக்கும்.

எஸ்.சந்திரசேகர் 10-11-1990 முதல் 21-6-1991 வரை 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 8-7-2007 அன்று தனது 80-வது வயதில் சந்திரசேகர் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x