கோதாவரி நதியில் மீன் பிடித்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோதாவரி நதியில் மீன் பிடித்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Updated on
1 min read

போலவரம்: கோதாவரி நதியில் மீன் பிடிக்​கச் சென்ற ஒரே கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்​கி உயிரிழந்​தனர்.

ஆந்​திர மாநிலம், போல​வரம் மாவட்​டம், கொம்ம கொத்​தகூடம் கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் பாரதி (40), பால​ராஜு (38), ரமேஷ் (38), சுசீலா (37), லட்​சுமி (37). இவர்​கள் 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க அப்​பகு​தி​யில் உள்ள கோதாவரி நதிக்​குச் சென்​றுள்​ளனர்.

நதியின் ஆழமான பகு​திக்​குச் சென்று அவர்​கள் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த போது, நதியில் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. வெள்ளத்​தின் வேகம் அதி​க​மாக இருந்​த​தால், கண் இமைக்​கும் நேரத்​துக்​குள் 5 பேரும் நதிநீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர்.

இதுகுறித்​துத் தகவலறிந்த உள்​ளூர் மீனவர்கள், போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். எனினும், நதி​யில் மூழ்கிய 5 பேருமே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். நீண்ட போராட்டத்​துக்​குப் பிறகு அவர்​களின் சடலங்​கள் மீட்​கப்​பட்​டன.

ஒரே கிராமத்​தைச் சேர்ந்த 5 பேர் நதி வெள்​ளத்​தில் உயி​ரிழந்த சம்​பவம், கொம்ம கொத்​தகூடம் கிராமத்​தில் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இச்​சம்​பவம் குறித்து போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

கோதாவரி நதியில் மீன் பிடித்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in