கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
Updated on: 
1 min read

கிரேட்டர் நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா, ரபுபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்லா ஸ்ரீ பதம் கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்கள் மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), அவர்களது குழந்தைகள் லட்டு (11), மிஷ்டி (7), சாக்ஷத் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், உணவு நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மகேஷின் குடும்பத்தினர் முந்தைய நாள் இரவு நூடுல்ஸ் சாப்பிட்டதாக அக்கம்பக்கத்தினர் மற்றும் மகேஷின் தாயார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், நூடுல்ஸ் சாப்பிட்டதுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உணவுப் பாதுகாப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, கிரேட்டர் நொய்டா காவல் துணை ஆணையர் ஸ்ரவன் குமார் சிங் கூறுகையில், ‘‘ரபுபுரா பகுதியில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கைகள் கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்’’ என்றார்.

கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
ராஜஸ்தான்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in