ராஜஸ்தான்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

போபால்: ராஜஸ்தான் மாநிலத்தில் டெம்போ டிராவலர் வேன் 15 அடி கால்வாயில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு டெம்போ டிராவலர் வேன் சென்று கொண்டிருந்தது. சிம்லியா போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த 15 அடி கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த மத்திய பிரதேச மாநிலம் பேட்டுல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in