ஆந்திரா​வில் வீட்​டின் பூட்டை உடைத்து 46 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளி திருட்டு

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

பல்​நாடு: ஆந்திராவில் வீட்​டின் பூட்டை உடைத்து 46 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளி பொருட்​களை திருடர்​கள் திருடி சென்​றனர். ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், எட்​ல​பாடு எனும் ஊரில் வசிப்​பவர் பார்​வ​தி. இவர், கடந்த சில நாட்​களுக்கு முன்னர், தனது குடும்​பத்​தா​ருடன் ஹைத​ரா​பாத்​தில் உள்ள தனது உறவினரின் வீட்​டிற்கு சென்​றுள்​ளார். பின்​னர், நேற்று காலை அனை​வரும் சொந்த ஊர் திரும்​பினர்.

அப்​போது, வீட்​டின் பூட்டை உடைத்து யாரோ வீட்​டில் இருந்த 46 சவரன் நகைகள், 2.4 கிலோ வெள்ளி பாத்​திரங்​கள் மற்​றும் ரூ.2 லட்​சம் ரொக்​கப் பணத்தை திருடி சென்​றுள்​ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்​தனர். உடனே, இதுகுறித்து போலீ​ஸாருக்கு புகார் அளித்​தனர். அதன்​பேரில், போலீ​ஸார் சம்பவ இடத்​திற்கு சென்று விசா​ரணை நடத்​தினர். அங்​குள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களை ஆய்வு செய்த​தில் ஒரு கும்​பல் வீட்​டின் பூட்டை உடைத்து திருடிச் சென்​றது தெரிய வந்​துள்​ளது. இதுகுறித்​து, போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். திருடு போன பொருட்​களின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in