மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்

உறுதிமொழிக் கடிதம் சமர்ப்பித்து களப்பணியின்றி பத்திரத்தை திரும்பப் பெறலாம்
மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்
Updated on
2 min read

சென்னை: மனையுடன் கட்​டிடம் இருந்​தால் அதற்​கான உயர் மதிப்பை ஏற்​ப​தற்​கான உறு​தி​மொழிக் கடிதம் சமர்ப்​பித்து களப்​பணி இல்​லாமல் பத்​திரத்தை திரும்ப பெறு​வதற்​கான புதிய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: கிரை​யம் உள்​ளிட்ட உரிமை மாற்று ஆவணங்​களில் மனை​யுடன், கட்​டிட​மும் சேர்த்து பதிவு செய்​யும்​போது, மனை​யில் உள்ள கட்​டிடம் குறித்த விவரங்​கள் குறிப்​பிட்​டு, அதன் மதிப்பு கணக்​கிட்டு ஆவணத்​துடன் இணைக்​கப்பட வேண்​டும்.

ஆனால், படிவத்​தில் முழு​மை​யான விவரங்​கள் இல்​லாமல் பதிவுக்கு தாக்​கல் செய்​யப்​படு​வதும், இதனால் களப் பணி​யின்​போது கட்​டிட மதிப்​பில் இழப்பு ஏற்​படு​வதும் கண்​டறியப்​படு​கிறது.

இதையடுத்​து, ‘திருத்​திய படிவத்​தில் கட்​டிட விவரங்​கள் ஆவணத்​துடன் இணைக்​கப்பட வேண்​டும். அதை சார்​ப​தி​வாளர்​கள் உறுதி செய்ய வேண்​டும்’ என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, களப்​பணி தொடர்​பாக ஏற்​கெனவே வழங்​கப்​பட்​டுள்ள வழி​காட்​டு​தல்​கள் முற்​றி​லும் மாற்​றப்​பட்​டு, களப்​பணியை எளிமைப்​படுத்தி ஒருங்​கிணைந்த அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, கட்​டிடத்​தின் கட்​டு​மானப் பரப்பு 2,500 சதுரஅடி மற்​றும் கட்​டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு குறை​வாக​வும், அதே​போல, கட்​டு​மானப் பரப்பு 2,500 சதுரஅடிக்கு அதி​க​மாக​வும், கட்​டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு குறை​வாக​வும் இருக்​கும் பட்​சத்​தில், சுய​சான்று அளிக்​கப்​பட்ட கட்​டிட மதிப்பு அல்​லது பொதுப்​பணித் துறை தளவிலை விவரப் பட்​டியல் அடிப்​படை​யில் கணக்​கிடப்​படும் சதுரஅடி மதிப்பு ஆகிய​வற்​றில் எது அதி​கமோ அதற்​கான முத்​திரைத் தீர்​வை, பதிவுக் கட்​ட​ணம் செலுத்​து​வ​தாக ஆவண​தா​ரரின் உறு​தி​மொழி சேர்க்​கப்பட வேண்​டும்.

அவ்​வாறு உறு​தி​மொழி அளிக்​கப்​பட்​டால், உயர் மதிப்​புக்​கான பதிவுக் கட்​ட​ணம், முத்​திரைத் தீர்வை வசூலித்து களப்​பணி இல்​லாமல் ஆவணத்தை திரும்ப வழங்​கலாம்.

அதே​போல, கட்​டிட மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் ரூ.5 கோடிக்கு கீழ் இருந்​தால், அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​டிட மதிப்​பாளர் அறிக்கை இணைக்​கப்பட வேண்​டும்.

கட்​டிட மதிப்​பாளர் வழங்​கும் மதிப்பு அல்​லது பொதுப்​பணித் துறை தளவிலை விவரப் பட்​டியல் அடிப்​படை​யில் கணக்​கிடப்​படும் சதுரஅடி மதிப்பு ஆகிய​வற்​றில் எது அதி​கமோ அதற்​கான முத்​திரைத் தீர்​வை, பதிவுக் கட்​ட​ணம் செலுத்​து​வதற்​கான உறு​தி ​மொழி பெறப்​பட்​டு, களப்​பணி இல்​லாமல் ஆவணத்தை திரும்ப வழங்​கலாம்.

ஆவண சொத்​தில் உள்ள கட்​டிடத்​தின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருந்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​டிட மதிப்​பாளரின் மதிப்பு அறிக்​கை, பொதுப்​பணித் துறை தளவிலை பட்​டியல் அடிப்​படையி​லான மதிப்பு ஆகிய​வற்​றில் எது அதி​கமோ அதற்​கான முத்​திரைத் தீர்வை, பதிவுக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டு, களப்​பணி இல்​லாமல் ஆவணத்தை திரும்ப வழங்​கலாம்.

ஒரு​வேளை, ஆவண​தா​ரர் உறு​தி​மொழி அளிக்​காத பட்​சத்​தில், உதவி செயற்​பொறி​யாளர் களப்​பணிக்கு ஆவணம் அனுப்​பப்​பட்​டு, மதிப்​பீட்டு அறிக்கை அடிப்​படை​யில் முத்​திரைத் தீர்​வை, பதிவுக் கட்​ட​ணம் வசூலித்து ஆவணத்தை திரும்ப வழங்​கலாம்.

அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள்

அடுக்​கு​மாடி குடி​யிருப்பில் கட்​டு​மானப் பரப்பு 2,500 சதுரஅடிக்கு குறை​வாக இருந்​தால் சுய​சான்று கட்​டிட மதிப்​பு, பொதுப்​பணித் துறை தளவிலை விவரப் பட்​டியல் அடிப்​படை​யில் மதிப்​பில் எது அதி​கமோ அதை வசூலித்து களப்​பணி இல்​லாமல் ஆவணத்தை திரும்ப தரலாம்.

கட்​டிடப் பரப்பு 2,500 சதுரஅடிக்கு மேல் இருந்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​டிட மதிப்​பாளர் அறிக்கை அல்​லது பொதுப்​பணித் துறை தளவிலை விவரப் பட்​டியல் இவற்​றில் எது அதி​கமோ அந்த தொகை வசூலிக்​கப்​பட்​டு, களப்​பணி​யின்றி ஆவணம் திரும்ப தரப்​படலாம்.

முடிவுறாத கட்​டிட​மாக இருந்​தால், உதவி செயற்​பொறி​யாளர் களஆய்வு நடை​முறை மாற்​றப்​பட்​டு, சுய​சான்று கட்​டிட மதிப்பு அல்​லது அரசு வெளி​யிட்​டுள்ள கட்​டிட மதிப்பு இவற்​றில் எது அதி​கமோ அதற்​கான முத்​திரைத் தீர்​வை, பதிவுக் கட்​ட​ணம் வசூலித்து களப்​பணி​யின்றி ஆவணத்தை திரும்ப வழங்​கலாம்.

ஒரு​வேளை, ஆவண​தா​ரர்​கள் கட்​டிட மதிப்​பின் அதிக பட்​சத்தை ஏற்க மறுத்தால், கட்​டிட மதிப்பு ரூ.5 கோடிக்கு கீழ் இருந்​தால் சார் ப​தி​வாள​ருக்​கும், ரூ.5 கோடிக்கு மேல் இருந்​தால் உதவி செயற்​பொறி​யாள​ருக்​கும் கட்​டிடத்​தின் மதிப்பை நிர்​ண​யிக்​க ஆவணம்​ அனுப்​பப்​பட வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

மனையுடன் கூடிய கட்டிடத்தை பதிவுசெய்ய புதிய நடைமுறை: வழிகாட்டுதல்களை வெளியிட்டார் பதிவுத்துறை தலைவர்
‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in