மணிப்பூரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் உட்பட 46 பேர் சரண்

மணிப்பூரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் உட்பட 46 பேர் சரண்
Updated on
1 min read

ஷில்லாங்: மணிப்​பூரில் தடை செய்​யப்​பட்ட கங்​லீ​பாக் கம்​யூனிஸ்ட் கட்சி தைபாங்க்​நங்க்பா என்ற தீவிரவாத அமைப்​பின் தலை​வர் உள்பட 46 பேர், நேற்று ஆயுதங்​களு​டன் மணிப்​பூர் அரசிடம் சரணடைந்​தனர்.

இம்​பாலில் உள்ள 1-வது மணிப்பூர் ரைஃபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்​தில் நடை​பெற்ற ‘வீடு திரும்​புதல்’ நிகழ்ச்​சி​யில், அந்த அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் 20 ஆயுதங்​கள், 216 தோட்​டாக்​கள் மற்றும் 3 வெடிபொருள்​களை அரசிடம் ஒப்​படைத்​தனர்.

சரணடைந்​தவர்​களை வரவேற்ற முதல்​வர் யும்​னம் கெம்​சந்த், “மீத​முள்ள போராளி​களும் ஆயுதங்​களை கைவிட்​டு, ஜனநாயகத்​தின் முக்​கிய நீரோட்​டத்​தில் இணைய வேண்​டும். ஆயுதங்​கள் மணிப்​பூரில் அமை​தியை ஏற்​படுத்​தாது’’ என்றார்.

மணிப்பூரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் உட்பட 46 பேர் சரண்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in