Last Updated : 08 May, 2015 03:48 PM

 

Published : 08 May 2015 03:48 PM
Last Updated : 08 May 2015 03:48 PM

பயண செலவு விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சிங்கப்பூர் பயணத்துக்காக அரசு மேற்கொண்ட செலவுகள் பற்றி கோரப்பட்ட தகவலுரிமை மனுவை பிரதமர் அலுவலகம் நிராகரித்தது.

லீ யுவான் கியூ-வின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்றார். அப்பயணத்தின் செலவுகள் குறித்த விவரத்தை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் தகவலுரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

ஆனால், பிரதமரின் பயண செலவுகளை அளிக்க முடியாது, காரணம் அவரது பயணம் பரந்துபட்டது, துல்லியமும், தெளிவுமற்றது என்று கூறி அவரது மனுவை பிரதமர் அலுவலகம் நிராகரித்தது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தகவலுரிமைச் சட்டத்தை பாஜக அரசு முடக்குகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். அரசு உயர் பதவி வகிப்பவர்களின் செலவினங்களைக் கோரும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்று கூறிய சோனியா, மத்திய தகவல் ஆணையம், செலவுகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மீதான செலவுகளின் விவரங்களைக் கோரும் 2-வது தகவலுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x