Published : 18 May 2015 08:48 AM
Last Updated : 18 May 2015 08:48 AM

தலைமை செயலர் நியமன விவகாரம்: டெல்லி, வடகிழக்கு மாநிலத்தவரை ஆம் ஆத்மி கட்சி அவமானப்படுத்துகிறது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு கடும் கண்டனம்

‘டெல்லி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது, ஆம் ஆத்மி கட்சியினர் குற்றச்சாட்டுகள் கூறுவதன் மூலம் வட கிழக்கு மாநிலத்தவர்களை அவமானப்படுத்துகின்றனர்’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி தலைமை செயலாளராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா டோலே காம்ளின் என்ப வரை நியமித்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். இதற்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சகுந்தலா மீது சரமாரியாகப் புகார் தெரிவித்தனர். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

சட்டப்படி தலைமை செயலரை நியமித்தது துணை நிலை ஆளுநர். ஆனால், சகுந்தலா திறமை இல் லாதவர் என்று ஆம் ஆத்மி கட்சியி னர் கூறுகின்றனர். இது அவருடைய நடத்தை மீது நடத்தப்படும் தாக்கு தல் போன்றது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் சட்டத்தை மதிக்கவில்லை. அத்துடன் டெல்லி மக்களையும் அவமானப்படுத்து கிறார்கள். சகுந்தலா மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் ஊழலில் ஈடுபட்டிருந்தால் அதற் கான ஆதாரங்களை கொண்டு வரட்டும். அதை விட்டுவிட்டு, திறமை இல்லாதவர் என்று டெல்லி அரசு கூறுவது ஒட்டுமொத்த வட கிழக்கு மாநிலத்தவர்களை அவமானப்படுத்தும் செயல்.

சட்டங்களை மீறி செயல்பட ஆம் ஆத்மி நினைக்கிறது. ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புவதன் மூலம் சட்டத்தை மீறுகிறது டெல்லி அரசு. ஆம் ஆத்மி அரசு, டெல்லியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறதா? டெல்லி ஒரு யூனியன் பிரதேசம். இதை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக் கூடாது. ‘நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு’ என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர். டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகள்கூட தேர்ந்தெடுக் கப்பட்ட அமைப்புகள்தான். மத்திய அரசுகூட தேர்ந்தெடுக்கப்படுவது தான். எல்லோரும் சட்டத்துக்கு உட்பட்டுதான் செயலாற்ற முடியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்பதற்காக சட்டத்தை பின்னுக்கு தள்ளியோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ செயல்புரிய முடியாது. இவ்வாறு கிரண் ரிஜுஜு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x