Published : 10 May 2015 11:53 AM
Last Updated : 10 May 2015 11:53 AM

போலி கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் நூதன மோசடி: வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் போலி கிரெடிட், ஏடிஎம் கார்டுகளைப் பயன் படுத்தி ரூ. 15 லட்சத்துக்கும் மேல் நூதன மோசடி நடைபெற் றுள்ளது.

ஹைதராபாத்தை அடுத்துள்ள செகந்திராபாத்தில் உள்ள சிண்டிகேட் வங்கி கிளையின் 22 வாடிக்கையாளர் களின் கணக்கில் இருந்து, அவர்களுக்கு தெரியாமலேயே கடந்த ஒரு வாரத்தில் ரூ.15 லட்சத்துக்கும் மேல் நூதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளை குளோனிங் முறையில் போலியாக தயாரித்து அவற்றின் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் பணம் குறைவதை அறிந்த வாடிக்கை யாளர்கள் வங்கியிலும், போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். நேற்று சில வாடிக்கையாளர்கள் செகந்திரா பாத் சிண்டிகேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வங்கியின் துணைப் பொது மேலாளர் பிரசாத் போலீஸில் புகார் கொடுத்தார். ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் புகார்களை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சம்பந்தப்பட்ட வாடிக்கை யாளர்களின் ஏடிஎம் கார்டுகளின் விவரம் மும்பை கிளையில் திருடப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை குளோனிங் செய்து அதன் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு பணத்தை திருடியுள்ளனர்.

மேலும் அனைவரது பணமும் மும்பையில் உள்ள ஒரு ஏடிஎம்மில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அந்த ஏடிஎம்மின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள விவரங்களை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x