Published : 18 May 2015 02:27 PM
Last Updated : 18 May 2015 02:27 PM

கொல்கத்தா சந்தையில் பயங்கர தீ விபத்து

141 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொல்கத்தா புது மார்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எஸ்.எஸ்.ஹாக் மர்கெட் என்றழைக்கப்படும் இந்தச் சந்தையில் இன்று முற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி மீன் மற்றும் காய்கறிச் சந்தையில் பற்றிக் கொண்டது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ பிடித்து அரை மணி நேரத்துக்குப் பின்னரே தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறுகிய பகுதி என்பதால் தீயணைப்புப் பணி சவாலாக இருந்ததாக அத்துறையினர் தெரிவித்தனர்.

சேதத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

கடந்த வாரம், புது மார்கெட் பகுதியில் உள்ள ஒரு வணிக அங்காடியில் தீ பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x