Last Updated : 07 May, 2015 08:32 AM

 

Published : 07 May 2015 08:32 AM
Last Updated : 07 May 2015 08:32 AM

மோடி அரசில் வெளிப்படை நிர்வாகம் இல்லை: மக்களவையில் சோனியா காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு வெளிப்படையான நிர்வாகம் என்ற கொள்கை யிலிருந்து பின்வாங்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) தலைமை ஊழல் கண் காணிப்பு ஆணையர் (சிவிசி) மற்றும் லோக்பால் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வேண்டு மென்றே நிரப்பாமல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்தார். ஆனால், கேள்வி நேரத்துக்குப் பிறகு பேச அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 8 மாதங்களாக சிஐசி பதவி காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் 3 தகவல் ஆணையர்கள் பதவியும் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளதால், 39 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தகவல் தெரிவிப்பதை தாமதப்படுத்துவது அதை மறுப்பதற்கு சமம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தான் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான, சிறந்த நிர்வாகம் நடைபெறும் என்று மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை ஆகியவை தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் வரவில்லை.

இது, கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப் பட்ட ஆர்டிஐ சட்டத்தை படிப் படியாக நீர்த்துப் போக வைப் பதற்கான முயற்சி ஆகும்.

லோக்பால் பதவியும் காலியா கவே உள்ளன. மேலும் இடித் துரைப்பாளர்களைப் பாதுகாக்கும் மசோதாவுக்கு கடந்த ஆண்டே குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டபோதிலும் இன்னும் அதை அரசிதழில் வெளியிட வில்லை. ஆனால் வேறு சில மசோதாக்களை நிறைவேற்று வதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சோனியாவின் குற்றச் சாட்டுகளை மத்திய அரசு மறுத் துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

சிஐசி பதவிக்கான விண்ணப் பங்கள் அரசால் முறைப்படி வரவேற்கப்பட்டன. இந்த விண் ணப்பங்களை தேர்வுக் குழு பரிசீ லித்து வருகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து, சிவிசி நியமன நடைமுறைகள் பற்றி தகவல் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இதுதான் தாமதத்துக்குக் காரணம். இந்த விவகாரத்தில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை.

லோக்பால் பதவிக்கான நியமனத்தைப் பொறுத்தவரை நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x