Last Updated : 12 Apr, 2015 10:18 AM

 

Published : 12 Apr 2015 10:18 AM
Last Updated : 12 Apr 2015 10:18 AM

பண்டிட்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை எதிர்த்து காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பந்த்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் `பந்த்’ நடத்தியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பண்டிட் இனத்தவர்கள் ஏராளமானோர் டெல்லியில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாகவே டெல்லியில் உள்ள பண்டிட்களை காஷ்மீரில் மீண்டும் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அங்கு வீடுகள் கட்டித் தரப்படும். அதற்காகத் தனி நகரியம் உருவாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசைக் கண்டித்து மாநிலத்தில் நேற்று பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர். பண்டிட்களை மீண்டும் காஷ்மீரில் குடியேற்றம் செய்வதற்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்), ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் இந்தப் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அதன்படி நேற்று காஷ்மீரின் பல இடங்களில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. நகரில் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், வங்கிகளில்கூட குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் இடம்பெயர்ந்து சென்று பண்டிட்களுக்குக் காஷ்மீரில் தனியாக டவுன்ஷிப் அமைக்க அவசியம் இல்லை என்று பண்டிட்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாத அமைப்பினரின் பந்த் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது, சட்டப் பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “பண்டிட்களுக்கு காஷ்மீரில் தனி நகரியம் எதுவும் அமைக் கப்படவில்லை. ஆனால் மாநிலத் திலிருந்து சென்ற சிறுபான்மை இனத்தவர்கள் (பண்டிட்கள்), மீண்டும் காஷ்மீருக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x