Published : 27 May 2014 05:20 PM
Last Updated : 27 May 2014 05:20 PM

ஊடகங்களின் சுதந்திரம் ஜனநாயகத்தின் சாராம்சம்: தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சர்

ஊடகங்களின் சுதந்திரமானச் செயல்பாட்டின் மீது மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது, மேலும் ஊடகங்களின் சுதந்திரமே ஜனநாயகத்தின் சாராம்சம் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார்.

"ஊடகங்களின் சுதந்திரம் ஜனநாயகத்தின் சாராம்சம். ஜனநாயகம் வெற்றி பெற ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் ஏனெனில் வேறுபடும் கருத்துக்களுக்கு இடையே மக்களுக்கு ஒரு தெரிவை இது வழங்குகிறது.

ஊடகங்களை வெளியிலிருந்துக் கட்டுப்படுத்துவது என்பது செயல்படுத்த முடியாத ஒன்று. 1975ஆம் ஆண்டில் ஊடகச் சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டது. அதற்கு எதிராக நாங்கள் போராடியிருக்கிறோம். மக்களும் அதற்கு எதிராகப் போராடினார்கள். நான் அதற்கு எதிராகப் போராடக்காரணம் நான் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன். இதனால் ஊடக சுந்தந்திரம் நசுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினோம், இதற்காக 16 மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தோம்" என்றார் அவர்.

ஆனாலும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருப்பது முக்கியம் என்பதையும் அவர் சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x