Last Updated : 27 Apr, 2015 09:30 PM

 

Published : 27 Apr 2015 09:30 PM
Last Updated : 27 Apr 2015 09:30 PM

பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை

2000-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது 2-வது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்த் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், யோகா குரு ராம்தேவ், பாஜக தலைவரும், மூத்த நடிகருமான ஷத்ருகன் சின்ஹா ஆகியோர் உட்பட 1,793 பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யபப்ட்டுள்ளன.

ஆன்மிகத் தலைவர் மாதா அமிருதானந்தமயி, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பின்னணிப் பாடகர் உதித் நாராயண், தொழிலதிபர் பிரிஜ்மோகன் லால் முஞ்சால் ஆகியோர் பெயர்களும் பத்மவிருதுகளுக்கு தேர்வு கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இவர்கள் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.

மலையாள சினிமா நட்சத்திரம் மோஹன்லால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரீதா ரெட்டி, திரை இயக்குநர் மாதுர் பந்தர்கர் உள்ளிட்டோர் பெயர்களும் பத்மவிருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பெயர்கள் இறுதி வடிவம் எடுக்கும் முன்னரே பாபா ராம்தேவ் இந்த விருதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x