Last Updated : 12 Mar, 2015 09:45 AM

 

Published : 12 Mar 2015 09:45 AM
Last Updated : 12 Mar 2015 09:45 AM

பிரதமர் மோடி-செசல்ஸ் அதிபர் மைக்கேல் முன்னிலையில் இந்தியா-செசல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடியின் செசல்ஸ் நாட்டு பயணத்தின்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப் படுத்துவது உட்பட இரு நாடு களுக்கிடையே நேற்று 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல்கட்டமாக நேற்று முன்தினம் செசல்ஸ் தலைநகர் விக்டோரியா வந்த மோடி, நேற்று செசல்ஸ் அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியா தரப்பில் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய் சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி மற்றும் செசல்ஸ் அதிபர் மைக்கேல் ஆகியோர் முன்னிலையில், நீர் வள ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்ட மைப்பு மேம்பாடு, கடற்பயண அட்டவணை விற்பனை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 ஒப்பந்தங்களில் இரு நாட்டு அதி காரிகளும் கையெழுத்திட்டனர்.

இந்தப் பயணத்தின்போது, கடலோர கண்காணிப்பு ரேடார் வசதியை மோடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் செசல்ஸ் நாட்டுக்குத்தான் முதலில் வந்துள்ளேன். இந்தியப் பெருங்கட லைச் சார்ந்த அண்டை நாடுகளில் மிகவும் முக்கிய கூட்டாளி செசல்ஸ். இந்தப் பயணம் குறுகியதாக இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

செசல்ஸ் நாட்டுக்கு இந்தியா இரண்டாவது டுரோனியர் விமா னத்தை வழங்கும். இரு நாடுகளுக் கும் இடையேயான ஒத்துழைப்புக்கு இது மற்றொரு அடையாளமாக விளங்கும்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக இருக்கிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் கடல் பகுதி பாது காப்பை மேம்படுத்துவதற்கு நமக்கு உள்ள பொதுவான பொறுப்பை நிறைவேற்ற வழி கிடைத்துள்ளது.

நம்பிக்கைக்குரிய நாடாக செசல்ஸ் விளங்குகிறது. இந்த நாடுடன் கூட்டாளியாக இருப்பது பெரிய கவுரவம். பாதுகாப்பு ஏற்பாடு களில் அழகான இந்த தீவுகளை பத்திரமாக பாதுகாக்க முடியும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத் தின் பாதுகாப்புக்கு சிறந்த பங் களிப்பை செசல்ஸ் ஆற்ற முடியும்.

நீர்வள ஆய்வு சம்பந்தமான ஒப்பந்தம், புதிய கடல் பாதுகாப்பில் புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. விரைவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை இடையிலான கடல் பாது காப்பு ஒத்துழைப்பில் செசல்ஸ் நாடும் கூட்டாளியாக இடம்பெறும்.

செசல்ஸ் நாட்டு குடிமக்களுக்கு இலவசமாக 3 மாத விசாவை இந்தியா வழங்கும். இந்தியா வந்தவுடன் உடனடி விசா வழங்கும் வசதி செசல்ஸ் நாட்டுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

செசல்ஸ் அதிபருக்கு அழைப்பு

இந்தியாவுக்கு வரும்படி செசல்ஸ் அதிபர் மைக்கேலுக்கு மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் செசல்ஸ் நாட்டுக்கு பயணம் செய்திருப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு 1981-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி செசல் ஸுக்கு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செசல்ஸ் நாட்டு மக்கள் தொகை 90 ஆயிரம். இதில் 10 சதவீதம் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

மொரீஷியஸ் சென்றடைந்தார்

செசல்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மொரீஷியஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்று மாலை தலைநகர் போர்ட் லூயிஸை சென்றடைந்த மோடி, அந்நாட்டு அதிபர் ராஜ்கேஸ்வுர் புர்யாக் மற்றும் அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜுக்நாத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். இன்று நடைபெற உள்ள மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்கிறார். மொரீஷியஸ் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி இலங்கைக்குச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x