Published : 03 Mar 2015 10:11 AM
Last Updated : 03 Mar 2015 10:11 AM

செல்லப் பிராணிகளாக புலிகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும்: மத்தியப் பிரதேச அமைச்சர் கோரிக்கை

மத்தியப் பிரதேச அரசில் கால் நடை, தோட்டக்கலை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருப்பவர் குசும் மெஹ்தலே. இவர் மாநில அரசின் வனத்துறை அமைச்சர் கவுரி சங்கர் ஷெஜ்வாருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந் துரை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில் அவர், “சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடு களில் சிங்கம் மற்றும் புலிகளை பொதுமக்கள் வளர்க்க சட்டப் பிரிவு உள்ளது. இதன் மூலம் இவற்றின் எண்ணிக்கை வியப் பூட்டும் வகையில் உயர்ந்துள்ளது.

புலிகளை காப்பதற்கு நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களில் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டாலும், புலி களின் எண்ணிக்கை குறிப்பிடும் படியாக உயரவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரி விக்குமாறு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனவிலங்குகள் ஆய்வு நிறு வனம் ஆகியவற்றுக்கு மத்தியப் பிரதேச முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நரேந்திர குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சரின் பரிந்துரை மற்றும் வனப் பாதுகாவலரின் கடிதம் ஆகியவற்றின் பிரதிகளை, போபாலைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலரான அஜய் துபே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அஜய் துபே கூறும்போது, “மூத்த அமைச்சர் மெஹ்தலேவின், இந்தப் புதுமை யான கோரிக்கை வியப்பை அளிக்கிறது. இவர் புலிகளுக்கு பெயர்போன பன்னா பகுதியைச் சேர்ந்தவர். இந்தக் கோரிக் கையை நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x