Published : 04 Mar 2015 01:11 PM
Last Updated : 04 Mar 2015 01:11 PM

பன்றிக் காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத் துறை ஆய்வு

மத்திய சுகாதாரத் துறையின் செயலர் பி.பி.ஷர்மா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் இறப்பு மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் நிலைக் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

பன்றிக் காய்ச்சலை எவ்வாறு கையாள்வது என்பதற்கான தற்போதுள்ள உத்திகளை ஆய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் உத்திகள் நிபுணர்களின் ஆலோசனை, அறிவுரைகள் மற்றும் திருத்தங்களுக்காக வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சகத்தால் கையாளப்படும் சிகிச்சை வரைமுறை, தடுப்பூசி கொள்கை, ஓசில்டமிவிர் மருந்து போன்ற உத்திகள் சரியாக உள்ளது என்று நிபுணர்கள் ஒருமனதாக தெரிவித்தனர். வருங்கால தேவைக்கு ஏற்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் இறப்பு குறித்த தரவை மிகக் கவனமாக ஆய்வு செய்வது, தகுந்த நேரத்தில் தகவல் கல்வி தொடர்பு திட்டத்தை தயாரித்து வெளியிடுவது, ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது, மாநிலங்கள் அளவில் பன்றிக் காய்ச்சல் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறைகளுடன் சிறப்பான ஒத்துழைப்பை கையாள்வது, மாநிலங்களில் அவசர உதவி முறைகளை மேம்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரிகளும் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x