Published : 28 Mar 2015 12:59 PM
Last Updated : 28 Mar 2015 01:00 PM
நைஜீரியாவில் அதிபர் தேர்தலுக்கான பொதுத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
உள்நாட்டுப் போராளிகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் முகமது புகாரி மற்றும் குட்லக் ஜோனதான் ஆகியோர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஒருமனதாக கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தில், தேர்தல் நேரத்தின் போது வன்முறை சம்பவங்களும் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், இன ரீதியான மோதல்களைத் தூண்டி விட மாட்டோம் என்றும் இரு முக்கிய வேட்பாளர்களும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர்.
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்காக ஒத்திவைக்கப்பட்ட அதிபர் தேர்தல் இன்று (சனிக்கிழமை) காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நைஜீரியா அரசியலில் மக்கள் ஜனநாயக கட்சி 1999 முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இம்முறை அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.