Published : 21 Mar 2015 05:13 PM
Last Updated : 21 Mar 2015 05:13 PM

மெல்ல மெல்ல மறைந்துவரும் சாந்தால்களின் கதைசொல்லும் கலை

மேற்கு வங்க சாந்தால் பழங்குடியினரின் புகழ்பெற்ற கதைசொல்லும பொம்மலாட்டக் கலைவடிவம் மெல்ல மெல்ல மறைந்துவருகிறது.

சாந்தால் பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் அவர்களின் இடம்பெயர்வு வாழ்வையும் கதைகளாக சொல்லக்கூடிய ஒரு பழங்கால பொம்மலாட்ட கலைதான் சாதர் பாதர்.

ஒரே ஒரு மாணவர்

பழமையான பொம்மலாட்ட கலைவடிவமான சாதர் பாதர் கலையை தற்போது நிகழ்த்திவரும் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில கலைஞர்களுள் ஒருவர்தான் டாமேன் மர்மு. கதைசொல்லும் பொம்மலாட்டத்தைப் பலபேரிடம் சென்றடைய வேண்டுமென்று தொடர்ந்து அதை மக்களிடையே நிகழ்த்தி வருபவர் இவர்.

எனினும், அவர் இதுவரை ஒரே ஒரு மாணவரைத்தான் பெற்றிருக்கிறார், அவரும் அவருடைய மருமகன்களில் ஒருவராவரான டாண்ட்டி சோரன்.

கைவினை இசைக்கருவியோடு சில பாடல்கள்

பொம்மைகள் தொங்கிக்கொண்டிருக்கும் மரப்பெட்டியொன்றை சுமந்தவாறே அந்த பொம்மைகளை இயங்க வைத்தபடி, அதன்வழியே பாடல்கள் பாடியும் அவரே கையால் தயாரித்த இசைக்கருவியை இசைத்தபடியும் இக்கலைஞர் சொல்லும் கதைகள் வித்தியாசமானவை.

''நான் 2002லிருந்து சாதர் பாதரை நிகழ்த்தி வருகிறேன். ஒவ்வொருநாள் காலையிலும் இந்தப் பெட்டியை என் சைக்கிளில் சுமந்துகொண்டு என் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் வரை போய் பல்வேறு கதைகளைச் சொல்வேன்'' என்று பொம்மலாட்டக் கலைஞர் மர்மு, இம்மாதத் துவக்கத்தில் கல்கத்தாவுக்கு வந்திருந்தபோது தி இந்து(ஆங்கிலம்)விடம் தெரிவித்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்து

வடக்கு வங்காளத்தின் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊருக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்காவிலிருந்து வந்திருந்தபோது தனது குழந்தைப்பருவத்தில் முதன்முதலாக ஒரு சாதர் பாதர் நிகழ்ச்சியை அவர் கண்டுமகிழ்ந்துள்ளார். இதைப் பற்றி மேலும் அவர் மாமாவிடமிருந்து கற்று அறிந்துகொள்வதற்காக, உத்தர் தினஜ்பூர் மாவட்டத்திலேயே அவர் பல ஆண்டுகள் அவருடன் தங்கிவிட்டார்.

பொம்மலாட்டமே வாழ்க்கையாக

அடுத்த சில ஆண்டுகளில், மர்மு, தானே மரத்தில் பொம்மைகளை செதுக்கிக்கொண்டு அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று பொம்மலாட்டத்தை நிகழ்த்தினார். பின்னர் அதையே ஒரு பிழைப்பாக்கிக் கொண்டு இக்கலையை நிகழ்த்திவருவதன் வாயிலாக அவர், பத்தாண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை, மக்களிடமிருந்து பெறும் அரிசி மற்றும் தானியங்களைப் பெற்று அவர் ஜீவனம் செய்துவருகிறார்.

சாந்தால் மக்களின் கலாச்சாரத்தையும் அவர்கள் இடம்பெயர்ந்த வாழ்வையுமே சாதர் பாதர் கலை வடிவம் பிரதிபலித்து வருவதாக மானுடவியலாளர்கள் கூறுகின்றனர்.

சாந்தால்களின் இடம்பெயர்வுக் கதைகள்

பொம்மலாட்ட நிகழ்த்துதலோடு ஒத்துப்போகும் விதமாக கதைகள் மற்றும் பாடல்களும் மாற்றங்களைக் கொண்டுள்ளது. பொம்மலாட்டத்தில் கூறப்படும் கதைகள், சொந்தமாக புனையப்பட்டவை என்பதைவிட மக்கள் வாழ்விலிருந்தே பெரும்பாலும் உள்வாங்கி அவற்றை பிரதிபலிக்கின்றன என்றும் என்றும் ஒரு நெருக்கமான ஆய்வு தெரிவிக்கிறது எனவும் கலுகி சக்ரவர்த்தி, இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகத் தலைவர் (கிழக்கு மண்டல மையம்) தெரிவிக்கிறார்.

பாராட்டுவிழா

இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகத்தோடு இணைந்து தன்னார்வ அமைப்பை நடத்திவரும் சாம்பவ் கல்கத்தாவில் பொம்மலாட்டக் கலைஞர் மர்முவுக்கு ஒரு பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

சாம்பவ்வின் பிரதிநிதி சௌரவ் சின்ஹா, இதுபற்றி கூறுகையில், சாந்தால் பழங்குடியினரின் அழிந்து வரும் கலையாக உள்ளது. சாதர்பாதர். இந்த பொம்மலாட்டத்தை தொடர்ந்து நடத்திவரும் மர்முவுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் வகையிலேதான் இந்த விழா நடத்தப்பட்டது.

ஆவணப்படம்

இந்நிலையில், சாதர் பாதர் பற்றிய ஆவணப் படமான ' ஒரு பொம்மலாட்டத்தின் கதை' (சாகா ஆஃப் ய பப்பட் ஷோ) யை திரைப்பட இயக்குநர் பாலாஷ் தாஸ் இயக்கியக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் இன்னும் சில வாரங்களில் இந்திய மானுடவியல் ஆய்வுக்கழக மையத்தில் திரையிடப்பட உள்ளது.

பழங்குடியினர்களின் பல்வேறு அம்சங்களைக்கொண்ட கலையோடு வாழும் இன்னொரு கலைஞரான பிர்பூமைச் சேர்ந்த சுகன் மார்டியின் வாழ்க்கையையும் இப்படத்தில் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் த இந்து(ஆங்கிலம்) விடம் இயக்குநர் தாஸ் கூறினார்.

பழங்குடியினரின் இந்தக் கலையானது, சமூக செய்திகளைக் கொண்டுசெல்லும் சாந்தல் பழங்குடியினரின் முக்கிய ஆயுதமாகவும் சாதர் பாதர் திகழ்வதாக அவர் கூறினார்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x