Last Updated : 08 Feb, 2015 02:30 PM

 

Published : 08 Feb 2015 02:30 PM
Last Updated : 08 Feb 2015 02:30 PM

ரூ.8.75 லட்சம் செலவு செய்து கார் ஃபேன்சி எண் வாங்கிய தொழிலதிபர்

மனைவி பரிசாக அளித்த ஆடம்பர காருக்கு ரூ.8.75 லட்சம் செலவு செய்து ஃபேன்சி எண் வாங்கியுள்ளார். சண்டிகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர்.

வாகனப் பதிவுக்கான ஏலத்தில் ஹரிஷ் கோயல் (50) என்ற இந்த தொழிலதிபர் ‘CH 01 BB 0001’ என்ற ஃபேன்சி எண்ணை வாங்கினார். இதற்காக இவர் செலவு செய்த தொகை ரூ.8.75 லட்சம்.

Porsche Cayenne என்ற ஆடம்பர காரை ஹரிஷ் கோயலுக்கு அவரது மனைவி காமினி பிறந்த நாள் பரிசாக அளித்தார்.

ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹரிஷ் கோயலிடம் 7 கார்கள் உள்ளன. அத்தனை கார்களுக்கும் ஃபேன்சி எண் பெற்றுள்ளார்.

0001 என்ற இந்த எண்-ஐ பெறுவதற்கு 8 பேர் போட்டியில் இருந்ததாகவும் தான் ஒரே ஒரு முறை தன் தொகையை கூறியதாகவும் அவர் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x