Published : 11 Feb 2015 10:12 AM
Last Updated : 11 Feb 2015 10:12 AM

ஆம் ஆத்மி வெற்றிக்கான காரணங்கள்

கடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது. இதில் ஒரு இடம் கூட கிடைக்காத போதிலும், மனம் தள ராமல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வந்ததார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால்.

வேட்பாளர்கள் அறிவிப்பு முதல் தேர்தல் அறிக்கை வெளியிட்டது வரை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளை பின் னுக்குத் தள்ளி முந்திக் கொண்டது ஆம் ஆத்மி. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ‘டெல்லி டயலாக்’ என்ற பெயரில் பொதுக் கூட்டங்களை நடத்தி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த முறை 49 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட கேஜ்ரிவால், அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதனால் 2-வதாக இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர். அடுத்தபடியாக முந்தைய காலங்களில் ஆக்ரோஷமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கேஜ்ரிவால், இதை பொதுமக்கள் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அதன் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து விமர்சனம் செய்வதைத் தவிர்த்தார். குறிப்பாக, கிரண் பேடி பாஜக முதல்வர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டதால் கோபமடைந்த போதிலும், அவரைப் பற்றி கேஜ்ரிவால் எதிர்மறையாக எதுவும் பேசவில்லை. இது போன்ற இவரது நடவடிக்கைகள் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, கடந்த தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பகிர்ந்துகொண்ட நிலையில், இந்த முறை ஆம் ஆத்மிக்கு சாதமாக அமைந்ததாகக் கூறப் படுகிறது. காங்கிரஸ் இழந்த வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மிக்கு சாதமானது.

பாஜகவில் சேர்ந்த மறுநாளே கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித் ததால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இதுவும் பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மத ரீதியில் வாக்குகளைப் பெற ஆம் ஆத்மி ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புஹாரி ஆதரவளிக்க முன்வந்த போது, கேஜ்ரிவால் அதை நிராகரித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆம் ஆத்மி வெற்றிக்கு வழிவகுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x