Published : 09 Feb 2015 12:04 PM
Last Updated : 09 Feb 2015 12:04 PM

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: ஒருவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லையோர கிராமவாசி ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களை குறிவைத்தும், இந்திய நிலைகளை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய இத்தாக்குதல் இன்று அதிகாலை 1 மணி வரை நீடித்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில், ஜோரா கிராமத்தைச் சேர்ந்த காதிம் ஹூசைன் என்பவர் படுகாயமடைந்தார்" என்றார்.

கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x