Published : 12 Feb 2015 08:56 AM
Last Updated : 12 Feb 2015 08:56 AM

குடியரசு அணிவகுப்புக்கு ரூ.100 கோடி செலவு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாதா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குடியரசு தின அணிவகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கும்போது, ஏழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியாதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பாது காப்புத் துறை அமைச்சகம் தொடர்பான திட்டப் பணிகளுக்காக விவசாயிகளின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நஷ்டஈடு வழங்குவது குறித்த வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரி யாணா உயர் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தபோது, விவசாயி களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ‘குடியரசு தின அணிவகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கிறீர்கள். ஆனால், ஏழை விவசாயிகளின் நிலத்துக்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருகிறீர்கள். வழக்கு தொடர்வதற்கு செலவழிக்க முன்வரும் நீங்கள், ஏன்று இழப்பீடு தர தயங்குகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘சமீபத்தில் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிக்கு குடியி ருப்பு வழங்கவில்லை. அவரால் எப்படி தீர்ப்பாயத்தில் பணியாற்ற முடியும். தீர்ப்பாயத்தை உரு வாக்குகிறீர்கள்; அதற்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டாமா?

நீதிபதிகளை காமன்வெல்த் கிராம குடியிருப்புகளுக்கு அனுப்பு கிறீர்கள்? ஏன் இந்த பாரபட்ச மான நடவடிக்கை? அடிப்படை வசதிகளை செய்து தர முடியாவிட்டால், தீர்ப்பாயத் தையே அமைக்காமல் இருக்க லாம் அல்லவா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x