Published : 11 Feb 2015 09:44 AM
Last Updated : 11 Feb 2015 09:44 AM

தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படும்: டெல்லி தேர்தல் முடிவு குறித்து பாஜக கருத்து

டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லில் ஏற்பட்ட படுதோல்வி, கட்சிக்கு பெரும் பின்னடைவு என் பதை ஒப்புக் கொண்டுள்ள பாஜக, தோல்விக்கான காரணங் கள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித் துள்ளது.

மேலும் இது கட்சியின் ஒட்டு மொத்த தோல்வி என்றும், இதற் காக பிரதமர் மோடி உட்பட தனிநபர் யாரையும் பொறுப்பாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி நேற்று கூறும்போது, “தேர்தல் தோல்வி எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தோல்விக்கான காரணங் கள் குறித்து மதிப்பீடு செய்யப் படும். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கேஜ்ரிவால் நிறை வேற்றுவார் என்று நம்புகிறோம். பிரதமர் நரேந்திர மோடி கூறி யிருப்பதுபோல, டெல்லி அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்றார்.

பாஜக பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் கூறும்போது, “டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கட்சியின் ஒட்டுமொத்த தோல்வி ஆகும். இதற்காக தனி நபர் மீது குற்றம்சாட்ட முடியாது. தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்கிறோம்” என்றார்.

பாஜகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறும் போது, “ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்களுக்கு வாழ்த்துகள். அதேநேரம் எங்களது தோல்வி குறித்து ஆராயப்படும்” என்றார்.

கட்சியின் டெல்லி மாநில தலைவர் சதீஷ் உபாத்யாய கூறும் போது, “மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். டெல்லி மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள நாங்கள் தவறிவிட்டோம். கடந்த காலத்தைப் போலவே மக்களுக்கு பாஜக தொடர்ந்து சேவை செய்யும். வெற்றி பெற்றுள்ள கேஜ்ரி வாலுக்கு வாழ்த்துகள்” என்றார்.

கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டின் மீது ஏற்பட்ட அதிருப்தியே தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது. மாறாக, அர்விந்த் கேஜ்ரிவாலின் 49 நாள் அரசின் செயல்பாட்டுக்கான மக்க ளின் மதிப்பீடாகவே இதனை நான் கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x