

விஜயவாடா: விஜயவாடா புதிய பைபாஸ் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த அந்தக் காரின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஜெயமங்கள நாக துர்கா மற்றும் அவரது மகன் நாக சாய் மற்றும் பைக்கில் எதிரே வந்த சிங்நகரை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் (50) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். காரில் இருந்த விஜயகுமார் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்து சென்ற போலீஸார் அவரை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.