குஜராத்: போலீஸுக்கு பயந்து ஓடிய 3 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குஜராத்: போலீஸுக்கு பயந்து ஓடிய 3 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
Updated on
1 min read

காந்திநகர்: குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்​டத்​தில் உள்ள வார்​தெஜ் நகரை சேர்ந்த 10க்​கும் மேற்​பட்ட நபர்​கள் நேற்று முன்​தினம் இரவு அங்​குள்ள வயல்​வெளி​யில் அமர்ந்து சீட்டு விளை​யாடிக் கொண்​டிருந்​தனர். அப்​போது அங்கு ஒரு வாக​னம் வந்​தது. அதில் இருந்து 3 பேர் இறங்​கினர்.

இதை பார்த்​ததும் சீட்டு விளை​யாடிக் கொண்​டிருந்த நபர்​கள் போலீஸ் ரெய்டு வந்​திருப்​ப​தாக நினைத்து பதறியடித்​துக் கொண்டு ஓடத் தொடங்​கினர். இருள் சூழ்ந்து இருந்​த​தால் கிணறு இருப்​பது தெரி​யாமல் அதற்​குள் 4 பேர் தவறி விழுந்​தனர். அவர்களில் ஒரு​வர் மட்​டும் எப்​படியோ போராடி வெளியே வந்துவிட்டார்.

மற்ற 3 பேரும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். கிணற்​றில் 3 பேர் பிண​மாக கிடப்​பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீ​ஸார் அவர்​களின் உடல்​களை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதற்​கிடை​யில், இறந்​தவர்​களின் உடல் வைக்​கப்​பட்​டுள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் திரண்ட அவர்​களின் குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​கள் உடல்​களை வாங்க மறுத்து போராட்​டத்தில் ஈடுபட்டனர். போலீ​ஸார் ரெய்டு வந்​த​தாலேயே இந்த சம்​பவம் நடந்​த​தாக​வும், 3 பேரின் உயி​ரிழப்​புக்கு காரண​மான போலீ​ஸார் மீது வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும் எனவும் அவர்​கள் வலியுறுத்தினர். இதையடுத்து, வாக​னத்​தில் வந்த 3 நபர்​களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குஜராத்: போலீஸுக்கு பயந்து ஓடிய 3 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
விநாடிக்கு 12,000 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in