Published : 27 Jan 2015 10:11 AM
Last Updated : 27 Jan 2015 10:11 AM

குடியரசு தின விழாவில் ராஜஸ்தானி டர்பன் அணிந்த மோடி

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா பேரணியின்போது பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான ராஜஸ்தானி பந்தானி டர்பன் அணிந்திருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவின்போதும் இதுபோன்ற டர்பன் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் அப்போது சிவப்பு நிற டர்பன் அணிந்திருந்த மோடி, நேற்று ராஜஸ்தானி டர்பன் (சஃபா) அணிந்திருந்தார். குடியரசுதின விழாவில் பிரதமர் மோடி பாரம்பரியமான ‘பந்த்காலா’ உடை அணிந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடும் குளிர் காரணமாக வழக்கமான உடைக்கு மேல் மேலங்கி அணிந்திருந்தார். மோடி உடை அணியும் விதத்தை அனைவரும் அவ்வப்போது பாராட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒபாமாவை வரவேற்பதற்காக டெல்லி பாலம் விமான நிலையம் சென்றபோது மோடி பாரம்பரிய குர்தா பைஜாமா அணிந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, மோடி அணியும் குர்தாவை அணிய விரும்புவதாக ஒபாமா நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x