Published : 11 Jan 2015 03:06 PM
Last Updated : 11 Jan 2015 03:06 PM

ஜீரோ டிகிரி குளிரை அனுபவிக்க லம்பாசிங்கியில் குவியும் சுற்றுலாவாசிகள்

குளிர்காலம் துவங்கி 2-வது முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள லம்பாசிங்கியில் வெப்பநிலை பூஜ்ய நிலைக்குச் சென்றுள்ளது.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி பதிவான பூஜ்ய டிகிரி செல்சியஸுக்குப் பிறகு மீண்டும் அத்தகைய குளிர்நிலையை அனுபவிக்க மக்கள் காத்திருந்தனர். ஏற்கெனவே ஒருமுறை 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த அளவுக்கு குளிர்நிலை மிகவும் கீழ்இறங்கியது.

விசாகப்பட்டிணத்திலிருந்து சிந்தபள்ளிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள அடர்த்தியான காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது லம்பாசிங்கி. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியின் குளிரை அனுபவிக்க விசாகப்பட்டிணத்திலிருந்தும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால் இந்த தட்பவெப்பநிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்பதுதான். ஆந்திரப் பிரதேச வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மண்டல வேளாண் ஆய்வு நிலைய விஞ்ஞானியும் அங்குள்ள இந்திய வானிலை ஆய்வு நிலைய வளாக தட்பவெப்பநிலை அளவீட்டுக்குழுவின் உயரதிகாரியுமான ஆச்சார்ய ரங்கா இதை உறுதிபடுத்தியுள்ளார்.

பூஜ்ய டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சுற்றுலாவினரைக் கவர்ந்துள்ள அதேவேளையில் தொடரும் இந்த ஓரிலக்க குறைவெப்பம் நிலவும் அதிகக் குளிரால் விசாகப்பட்டிணத்தைச் சுற்றியுள்ள மக்களை நோய்கள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிந்தப்பள்ளியில் 3 டிகிரி வெப்பநிலையும் பாடேருவில் 6 டிகிரியும் சுற்றுவட்டாரத்தின் பல பகுதிகளிலும் இதே வெப்பநிலை இருந்துவருகிறது.

காய்ச்சல், இருமல், குளிர், தொடர் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மூட்டுவலிகளில் பொதுமக்கள் பாதித்துவருவதாக புகார்கள் வந்துள்ளன. ஆங்காங்கே சாலைகளில் உறைபனிகள் சாலையோரங்களில் விழுந்து போக்குவரத்தைப் பாதித்து வருகிறதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x