Last Updated : 12 Jan, 2015 07:53 PM

 

Published : 12 Jan 2015 07:53 PM
Last Updated : 12 Jan 2015 07:53 PM

கட்சிகள் இணைப்பிற்கு பிறகு நிதீஷ்குமார் பெயர் முதல்வர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும்: மாஞ்சி

பிஹார் முதல்வர் ஜீதன் ராம் மாஞ்சி தனது அரசியல் முன்னோடியும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதீஷ் குமார் பெயரை கட்சிகள் இணைப்பிற்கு பிறகு முதல்வர் பதவிக்கு முன்மொழிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்கலந்துகொண்டு திரும்பிய முதல்வர் மாஞ்சி, " நிதீஷ் குமாரைக் காட்டிலும் சிறந்த முதல்வர் இருக்க முடியாது. எனவே கட்சிகள் இணைப்பிற்குப் பிறகு அவரது பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழியவிருக்கிறேன்.

கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைப்பிற்கு பிறகு ஒரு பெயரை முன்மொழிவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அல்லது அந்த நேரத்தைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஒரு புதிய பெயரை முன்மொழியவும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. மேலும் ஊடகங்கள் நான் பதவியிலிருந்து நீக்கப்படுவதை தேவையின்றி மிகைப்படுத்துகின்றன. உண்மையில் இது ஒரு விஷயமே இல்லை.

மாஞ்சி தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என நிதிஷ்குமார் கூறுவதற்கு காரணம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "அவர் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி. எனவே ஆதாரமற்ற இத்தகைய செய்திகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதுவே பதிலாக இருந்தது.

தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் மாநில முதல்வராக இருக்க வேண்டும் என்று மாஞ்சி கூறியதன் நோக்கம் என்ன என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “பலவீனமான பிரிவினருக்காக நான் பேசியதன் காரணம் நானே அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x