Published : 30 Dec 2014 10:46 AM
Last Updated : 30 Dec 2014 10:46 AM

‘ஷாக்கா’ பயிற்சிகளை விரிவுபடுத்துகிறது ஆர்எஸ்எஸ்

பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படுவது ஆர்.எஸ்.எஸ். இது தன் தொண்டர்களுக்காக நாடு முழுவதும் ஷாக்கா எனும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

சுமார் ஒருமணி நேரம் நடக்கும் இந்த உடற்பயிற்சிக்கு வரும் தொண்டர்களிடம் இந்துத்துவா கொள்கைகளைப் போதிப்பதுடன், அதை நாடு முழுவதும் பரவச் செய்ய பயிற்சியும் அளித்துவருகிறது.

ஆர்எஸ்எஸ்ஸின் இந்நடவடிக் கை விஸ்வ இந்து பரிஷத், விஜய் வாஹிணி, அகில பாரதிய வித்யா பரிஷத் மற்றும் பாஜக உட்பட அதன் பல அமைப்புகளையும் வலுப்படுத்துவதுடன், இந்துத்துவா கொள்கைகளையும் நாடு முழுவதும் பரப்ப உதவியாக இருந்து வருகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்.எஸ்.எஸ் அதிகாரபூர்வ ‘ஆர்கனைஸர்’ ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி கூறும்போது, “தற்போது நாடு முழுவதும் நடந்து வரும் 50,000 ஷாக்கா பயிற்சிகளை, இருமடங் காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகம் உட்பட தென் இந்தியா வின் மற்ற மாநிலங்களிலும் தீவிரப்படுத்த இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x