Last Updated : 03 Dec, 2014 08:46 AM

 

Published : 03 Dec 2014 08:46 AM
Last Updated : 03 Dec 2014 08:46 AM

காவிரி விவகாரம்: டெல்லியில் வரும் 15ம் தேதி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை எதிர்த்து, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு டெல்லியில் போராட்டம் அறிவித்துள்ளது.

இதில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நாடாளுமன்றம் அருகில் வரும் டிசம்பர் 15 முதல் தொடர் உண்ணா விரதம் இருக்க முடிவு செய் துள்ளனர். இதற்கு ஆதரவு அளிக் கும்படி கேட்டு, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குழு டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களை நேற்று சந்தித்தனர்.

திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, பாஜக உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து அவர்கள் ஆதரவு கேட்டனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாண்டியன் கூறும்போது, “நாங்கள் சந்தித்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தருவதாகவும், போராட்டத்தில் கலந்துகொள்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். காவிரி விவ காரத்தை பொறுத்தவரை சட்டப் படி தமிழகத்தின் பக்கம் நியாயம் இருந்தாலும், கர்நாடக அரசு சட்டத்தை மதிக்காமல் உரிய தண்ணீரை தர மறுக்கிறது. இதன் விளைவாக மூன்று போகம் சாகுபடி நடைபெற்று வந்த தமிழக காவிரி டெல்டா பகுதியில் இன்று ஒரு போகம் மட்டும்தான் சாகுபடி செய்யமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் விவசாயிகள் பொரு ளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதுடன், பல லட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து காவிரி டெல்டாவை விட்டே வெளி யேறி வருகின்றனர். சுமார் 20 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் சமீபத்திய நட வடிக்கை விவசாயிகள் அனைவ ருக்கும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பிரதமர் நரேந்திரமோடி இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் எதிரே உண்ணா விரதம் இருக்க முடிவு செய்துள் ளோம். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x