Published : 02 Dec 2014 01:49 PM
Last Updated : 02 Dec 2014 01:49 PM

ராமர் ஆட்சி வேண்டுமா?- மத்திய அமைச்சரின் சர்ச்சைப் பேச்சால் மாநிலங்களவையில் கொந்தளிப்பு

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக நாடாளுமன் றத்தில் நேற்று அமளி ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசும்போது. “ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்” என்றார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாநிலங்களவை யில் நிரஞ்சன் ஜோதி பேசும்போது, அவைக்கு வெளியே நான் தெரி வித்த கருத்துகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். அந்த வார்த்தை களை திரும்பப் பெற்றுக்கொள் கிறேன். அவை விரும்பினால் மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

மக்களவையிலும் அமைச்சர் இதனை கூறினார். என்றாலும் ‘அமைச்சர் வெறும் மன்னிப்பு கேட்டால் போதாது, பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சி உறுப் பினர்கள் வலியுறுத்தினர். அவை யின் மையப்பகுதிக்கு வந்து அவர் கள் கூச்சலிட்டதால் அவை நட வடிக்கைகள் முற்றிலும் முடங்கின.

நாடாளுமன்றத்தில் இரு அவை களும் நேற்று காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, டெல்லியில் நடந்த பிரச் சார கூட்டத்தில் நிரஞ்சன் ஜோதி வகுப்புவெறியை தூண்டும் வகை யில் பேசியதாகவும் அதற்காக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர். மேலும் இந்தப் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

காங்கிரஸ், திரிணமூல் காங் கிரஸ், சமாஜ்வாதி மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை யின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டதால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டும் மதிய இடைவேளை வரை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியதும், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி எழுந்து, உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு களை சுட்டிக்காட்டி பேசினார். “மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும், அவரை பதவி நீக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் அமைச்சர் ஜோதி மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அதை மீண்டும் எழுப்பவேண்டாம் என நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் எதிர்க்கட்சிகள் பிடிவாதம் காட்டின.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “அவைக்கு வெளியே அமைச்சர் கூறிய கருத்துக்கு என்னால் நட வடிக்கை எடுக்க முடியாது” என கைவிரித்தார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஜோதியின் கருத்து முறையற்றது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சமாதானம் செய்ய முயன் றார். என்றாலும் எதிர்க்கட்சியினர் இதை ஏற்கவில்லை. மாநிலங் களவையை 10 நிமிடங்களுக்கும், பின்னர் நாள் முழுவதற்கும் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார்.

மக்களவையில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களை சமாதானம் செய்து பேசும்போது, “இது சாதாரண விஷயமில்லை என்பது சரிதான். அமைச்சர் இதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறார்” என்றார். என்றாலும் இதற்கு பலனில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x