Published : 20 Dec 2014 11:21 AM
Last Updated : 20 Dec 2014 11:21 AM
$ பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2008-ம்ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார். பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜின் இளைய மகன்.
$ புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், வார்விக் பல்கலைக்கழகத்தில் உற்பத்தித் துறையில் முதுகலை படிப்பு மற்றும் ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ.படித்தவர்.
$ ஆரம்ப காலத்தில் டாடா மோட்டார்ஸ் ஆலையில் சில காலம் பணிபுரிந்தார். 1994-ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இணைந்தார். துணைத்தலைவர், செயல் இயக்குநர் என பல பொறுப்புகளைக் கவனித்தார்.
$ 2008-ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து பஜாஜ் நிதிச் சேவைகள் பிரிவு பிரிக்கப்பட்டபோது பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்துக்கு பொறுப்பேற்றார்.
$ பஜாஜ் குழுமத்தின் சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.
$ 2005-ம் ஆண்டு ‘பிஸினஸ் டுடே’ பத்திரிகை சிறந்த தலைமை நிதி அதிகாரி விருதினை இவருக்கு வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT