Last Updated : 13 Dec, 2014 11:07 AM

 

Published : 13 Dec 2014 11:07 AM
Last Updated : 13 Dec 2014 11:07 AM

ட்விட்டரில் சிக்கிய ஐடி ஊழியர்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தாரா? - பெங்களூரு தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூருவில் பணிபுரியும் ஐ.டி. நிறுவன ஊழியர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக ட்விட்டர் மூலம் ஆள் சேர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூரு தனிப் படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இராக், சிரியா ஆகிய‌ நாடுகளில் இயங்கி வரும் ஐஎஸ் தீவிர வாத அமைப்பு, சமூக இணைய தளங்கள் மூலம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க முயன்று வரு வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து சமூக இணைய‌ தளங்களை உளவுத்துறை தீவிர மாக கண்காணித்து வருகிற‌து.

ஐஎஸ் அச்சுறுத்தல்

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:

பெங்களூருவில் உள்ள பன் னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் மேக்தி, @shamiwitness என்ற ட்விட்டர் பக்கத்தை வைத்திருக் கிறார். ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான‌வர்களை மூளைச் சலவை செய்துள்ளார்.

மேக்தி தனது ட்விட்டர் பக்கத் தில் தினமும் காலை, மாலை என 2 முதல் 5 முறை கருத்துகளை பதிவிடுவார். அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்பற்றி யுள்ளனர். இதில் 3-ல் 2 பங்கு பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் நம்பிக்கை உள்ள வர்கள் என தெரியவந்துள்ளது. சிலர் அந்த அமைப்புக்காக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

மேக்தி வெளிப்படையாகவே ஐஎஸ் அமைப்பை ஆத ரித்து பதிவிட்டுள்ளார். அவரது பெரும்பாலான கருத்துகள் இஸ்லாமியர்களின் துயரத்தையும், அவல வாழ்வையும் வெளிப் படுத்துகின்றன. தனியாக இஸ் லாமிய நாடு அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதேபோல இன்னொரு பதிவில், “தேவை கருதி நான் ஐஎஸ் அமைப்பில் இணைய தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைச் சார்ந்து இருக்கும் குடும்பத்துக்காக இங்கேயே இருக்கிறேன்” என கூறியுள்ளார். அவருடைய உயிருக்கு அச்சுறுத் தல் இருப்பதால் அவரது முழு விவரத்தையும், புகைப்படத் தையும் வெளியிடவில்லை.

இங்கிலாந்தில் உள்ள ஐஎஸ் அமைப்பினருடன் மேக்தி தொடர்பு வைத்துள்ளார். அவருடைய சமூக இணைய தள பக்கங்களையும், மின்னஞ் சலையும் கண்காணித்ததில், அவர் இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் மேக்தி தனது ஃபேஸ் புக்கில் பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டிக் கொண்டுள் ளார். அதில் திரைப்படம் குறித்த சுவையான தகவல்களையும், கேளிக்கை விடுதிகளில் நண்பர் களுடன் எடுத்த புகைப்படங் களையும் பதிவிட்டு உள்ளார். பெங்களூருவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை யையும் வன்மையாகக் கண்டித் துள்ளார் என அதில் கூறப்பட் டுள்ளது.

`சேனல் 4' தொலைக்காட்சியில் தன்னைப்பற்றிய செய்தி வெளி யானதையடுத்து, மேக்தி தனது சமூக இணையதளங்களை மூடி யுள்ளார்.

தீவிர விசாரணை

ஐஎஸ் தீவிரவாத அமைப் புக்கு பெங்களூருவில் ஆள் சேர்த்ததாக செய்தி வெளியானதை யடுத்து கர்நாடக மாநில உளவுத் துறை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் டெல்லியிலிருந்து மத்திய உளவுத் துறை அதிகாரி களும் பெங்களூரு விரைந்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு உளவுத் துறை போலீஸார் பெங்களூருவில் தீவிரவாத அமைப்புகள் சமூக இணைய தளங்களில் இயங்கி வருவதாக எச்சரித்து இருந்தனர்.

இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள தகவல் குறித்து விசாரிக்க, மாநகர குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் அபிஷேக் கோயல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சைபர் கிரைம் போலீ ஸாரும், குற்றப்பிரிவு போலீஸா ரும் உள்ளனர். தனிப்படை போலீஸார் பெங்களூருவில் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். கூடிய விரைவில் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிப்பார்கள். எனவே பொது மக்கள் பதற்றமடைய தேவை யில்லை என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x