Published : 29 Dec 2014 12:06 PM
Last Updated : 29 Dec 2014 12:06 PM

பெங்களூரு குண்டு வெடிப்பு நிகழ்விடத்தில் ஆபத்பாந்தவனான ஆட்டோ ஓட்டுநர்

பெங்களூரில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களை துரிதமாக தனது ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிர்களை காத்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

சம்பவம் நடந்தபோது எம்.ஜி.சாலையில் இருந்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் பி.நரசிம்மா. அப்போது, அங்கு பரபரப்பாக ஓடிவந்த பொதுமக்கள் சிலர் நரசிம்மா கோரியுள்ளனர்.

உடனடியாக, அருகில் இருந்த சர்ச் வீதிக்குள் நுழைந்த நரசிம்மா கண்ட காட்சி, காயங்களுடன் சிலர் தரையில் கிடப்பதை. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று மட்டும் அவருக்கு புரிந்தது. ஆனாலும், சற்றும் தயங்காமல் நரசிம்மா அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்திருக்கிறார்.

காயமடைந்தவர்கள், அவர்களது உறவினர்கள் என மொத்தம் 9 பேரை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த மல்லய்யா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

நரசிம்மாவின் உதவியால் 3 பேர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x