Last Updated : 14 Dec, 2014 09:07 AM

 

Published : 14 Dec 2014 09:07 AM
Last Updated : 14 Dec 2014 09:07 AM

காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் 4-ம் கட்ட தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப் பேரவைகளுக்கு இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரில் 18 தொகுதிக ளுக்கு நடைபெறும் தேர்தலில் 2 முதல்வர் வேட்பாளர்கள், இப்போதைய சபாநாயகர் முபாரக் குல் உட்பட 182 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஸ்ரீநகர், அனந்த்நாக், ஷோபியான், சம்பா ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,890 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 14.73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஸ்ரீநகர் பகுதியில் இப்போது தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) வசம் உள்ள 8 தொகுதிகள் மீதுதான் அனைவரது பார்வையும் உள்ளது.

முதல்வர் ஒமர் அப்துல்லா ஸ்ரீநகர் பகுதிக்குட்பட்ட சோன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். மூன்றாம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற பட்கம் மாவட்டம் பீர்வா தொகுதியிலும் ஒமர் போட்டியிடுகிறார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) நிறுவனரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான முப்தி முகமது சயீது அனந்த்நாக் தொகுதியில் மீண்டும் போட்டியிடு கிறார்.

இன்று தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரச்சாரம் அமைதியாக நடைபெற்றது. ஆனால், அனந்த்நாக் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை கையெறி குண்டு வீசினர். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர். இந்நிலையில் 4 மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சடலம் கண்டெடுப்பு

பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் குலாம் முகமது மிர் (62) நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்நிலையில் சோபோர் நகரின் ஷாலாபுக் பகுதியிலிருந்த இவரது சடலத்தை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் 15 தொகுதிக ளுக்கு இன்று நடைபெறும் தேர்தலில் 16 பெண்கள் உட்பட 217 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 43.48 லட்சம் வாக்கா ளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள் ளனர். அனைத்து தொகுதிகளுமே மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் தன்வார் தொகுதிக்கான தேர்தல் (3-வது கட்டம்) முடிந்துவிட்டது. இன்று தேர்தல் நடைபெறும் கிரிதி தொகுதியிலும் மராண்டி களத்தில் உள்ளார். 3 அமைச் சர்கள், 11 எம்எல்ஏக்களும் இன்றைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

தன்பாத் மற்றும் பொகாரோ ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் மற்ற தொகுதி களில் மாலை 3 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், 3 கட்டங் களாக நடைபெற்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடி வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x