Last Updated : 02 Feb, 2014 09:04 AM

 

Published : 02 Feb 2014 09:04 AM
Last Updated : 02 Feb 2014 09:04 AM

ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் சோனியா, மோடி ஏன்?- ஆம் ஆத்மி விளக்கம்

வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எதிர்த்து போட்டியிட இருக்கும் நாட்டின் ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் சோனியா காந்தி மற்றும் நரேந்திர மோடியின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.



இவர்களை அதில் சேர்த்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சி சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் உயர்மட்ட அரசியல் குழு உறுப்பினருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சோனியா, மோடி ஆகிய இருவரும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்கள் தேர்தலில் போட்டியிடவதற்கும் ஆதரவு தருகின்றனர். இவ்வகை அரசிய லுக்கும் நாங்கள் முடிவுக்கட்ட விரும்புகிறோம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்த ஊழல்வாதிகள் (160 பேர்) பட்டியலில் மேலும் சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன" என்றார்.

அக்கட்சியின் மற்றொரு மூத்த தலவர் யோகேந்தர் யாதவ் கூறுகையில், "நாடு முழுவதிலும் உள்ள சமூகசேவை மற்றும் பொதுநலத் துக்காக போராடும் அமைப்புகளின் தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். மேலும் பலர் சேர உள்ளனர். இவர்கள், டெல்லி, பஞ்சாப், பிஹார், ஜார்க் கண்ட், குஜராத், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஒடிஷா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்" எனக் கூறிய அவர் பட்டியலையும் வெளியிட்டார்.

அதில், நர்மதா பச்சாவ் அந்தோலன், ஆசாதி பச்சாப் அந்தோலன், ஜன்சங்கர்ஷ் வாஹிணி, சமாஜ்வாடி ஜன் பரிஷத், ஜன் சுவாத்யா மன்ச், என்.ஏ.பி.எம். மற்றும் போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட வர்கள் அமைப்பு என்பன உட்பட பல்வேறு அமைப்பினர் மற்றும் காந்தியவாதிகள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், கர்நாடகாவின் தொழிற் சங்க தலைவரான பாபு மாத்யூ, சர்வதேச ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், ஆதிவாசி சமூகநல அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் விவசாய நல போராட்ட அமைப்பினர்களும் உள்ளனர்.

யோகேந்திர யாதவ் உடன் கோபால் ராய்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x