Last Updated : 20 Dec, 2014 12:02 PM

 

Published : 20 Dec 2014 12:02 PM
Last Updated : 20 Dec 2014 12:02 PM

இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தகவல்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற 40-வது சர்வதேச சமூக சேவை அமைப்புகளின் மாநாட்டு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

இதுதான் தேசத்துக்கு உகந்த தருணம். இந்திய மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிக் கிறது. இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய ஒவ்வொருவரையும் தகுதியாக்கிக் கொள்வதற்கான நிலையை நோக்கி இந்தியா நடைபோடுகிறது.

மத்தியில் அதிகார மாற்றம் ஏற்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகள் மாற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் இது போதுமானதல்ல. இத்தேசம் மேலும் வெற்றிகரமானதாக மாற, ஒட்டுமொத்த சமூகமும் எழுச்சி பெற வேண்டும். அவ்வாறு நிகழ்ந் தால் மட்டுமே அரசின் சாதனைகள் முழு பயனுள்ளதாக இருக்கும். சமூகம் மற்றவர்களுக்காகவும் தேசத்துக்காகவும் தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

கார்கில்போரின்போது, பாகிஸ் தான் படைகள் நம்மை விட உயர மான பகுதியில் இருந்த போதும் நாம் வெற்றி பெற்றோம். அதற்குக் காரணம் ஒட்டுமொத்த மக்களும் நமது ராணுவத்துக்கு ஆதரவளித் தார்கள். அதுபோன்ற ஒற்றுமை யான சூழலே தேசத்தை வெற்றி கரமாக முன்னகர்த்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்து விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x