Last Updated : 20 Dec, 2014 11:58 AM

 

Published : 20 Dec 2014 11:58 AM
Last Updated : 20 Dec 2014 11:58 AM

ராஜஸ்தானில் மருத்துவ அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ கட்சியில் இருந்து இடைநீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் செவிலியர் ஒருவருக்கு இடமாறுதல் கேட்டு தலைமை மருத்துவ அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ. பிரகலாத் குஞ்சால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டா (வடக்கு) தொகுதி எம்எல்ஏ குஞ்சால். இவர் கோட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.என்.யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது கட்சி நிர்வாகி ஒருவரின் உறவினருக்கு பணியிட மாற்றம் கேட்டுள்ளார். இதை ஏற்காத யாதவை அடிப்பேன், உதைப்பேன், தோலை உரிப்பேன் என்றெல்லாம் எம்எல்ஏ வசைமாறி பொழிந்துள்ளார். இதுகுறித்த ஆடியோ பதிவு சமூக வலைதளத் தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி யது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீது காவல் நிலையத்தில் அதிகாரி யாதவ் புகார் கொடுத்தார்.

“மருந்துகளை கையாடல் செய்ததாக, எல்எல்ஏ குறிப்பிடும் பணியாளர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி தெரிவித்தும் அவருக்கு இடமாறுதல் கேட்டு எம்எல்ஏ பிடிவாதம் காட்டினார்” என்று யாதவ் கூறினார்.

யாதவ் புகாரை தொடர்ந்து குஞ்சால் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.குஞ்சால் தன் மீதான குற்றச்சாட்டு களை முதலில் மறுத்தார். பின்னர் தனது கட்சிக்கும் இந்திய மருத்துவ சங்கத்துக்கும் எழுத்து மூலம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று டெல்லியில் கூறும்போது, “தகாத வார்த்தைகளை பயன்படுத் திய எம்எல்ஏ கட்சியில் இருந்து சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட் டுள்ளது. இதுபோன்ற செயல்பாடு களை ஏற்க இயலாது” என்றார்.

இதனிடையே தலைமை மருத்துவ அதிகாரி யாதவ் மற்றும் 2 மருத்துவர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய் துள்ளனர்.

எம்எல்ஏ மீது 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால், மேலும் பல மருத்து வர்கள் பதவி விலகுவார்கள் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x