Published : 14 Dec 2014 11:16 AM
Last Updated : 14 Dec 2014 11:16 AM

உளவுத்துறை இயக்குநராக தினேஷ்வர் நியமனம்

உளவுத்துறை இயக்குநராக தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை யின் நியமனக் குழுக் கூட்டத்தில் தினேஷ்வர் சர்மாவை உள்நாட்டு உளவுத்துறையின் (ஐ.பி.) இயக்குநராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அவர் உடனடியாக ஐ.பி.யின் அதிகாரியாக (சிறப்புப் பணி) நியமிக்கப்படுவதாகவும், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அத் துறையின் இயக்குநராக அவர் பொறுப்பு ஏற்பார் என்றும் நியமனக்குழு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இப்போது உளவுத்துறை இயக்குநராக உள்ள எஸ்.ஏ. இப்ராஹிமின் பதவிக் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

தினேஷ்வர் சர்மா, 1979-ம் ஆண்டு கேரளப் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். உளவுத் துறை யில் 20 ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவமிக்கவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x