Published : 10 Jul 2019 12:11 PM
Last Updated : 10 Jul 2019 12:11 PM

புறநானூற்றுப் பாடல் பொருந்தவில்லை- திருக்குறள் மூலம் மக்களவையில் பட்ஜெட்டை விளக்கிய ஆ.ராசா

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியபோது, புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி பேசினார். அப்போது, 'யானை புகுந்த நிலம்போல' என்ற பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய  நிர்மலா சீதாராமன் வரி குறித்து பேசினார். மன்னர் எவ்வாறு வரிவசூலிக்க வேண்டும் என்பதை பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் எடுத்துக் கூறியதை நிர்மலா விளக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா, பட்ஜெட் எப்படி இருக்கிறது என்பது குறித்துத் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசும்போது, ''அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய புறநானூற்றுப் பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் வரி வசூலிக்கும் முறை குறித்து கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் கவலைப்படுவது, வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது பற்றியே. எங்கிருந்து வரியைப் பெறுவது, வரிவிலக்கு அளிப்பது எப்படி என்பது குறித்துதான் கவலைப்படுகிறோம். எனவே இதற்கு சரியான வழிமுறையை திருக்குறளில் இருந்து கூறுகிறேன்.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

இதன் அர்த்தம் திட்டமிடுதல், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல். இந்த நான்கையும் மன்னன் பின்பற்ற வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த நான்கு அம்சங்களிலும் பட்ஜெட் தோல்வியடைந்துவிட்டது'' என்றார் ஆ.ராசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x